கேளிக்கை

ஹன்சிகா : பிறந்தநாள் சர்ப்ரைஸ்

(UTV | இந்தியா) – நடிகை ஹன்சிகா நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்திருக்கும் ஹன்சிகா மோத்வானி, சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 3.7 மில்லியன் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஹன்சிகாவின் 29 வது பிறந்தநாள் அன்று அவருக்கு எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால் ஒரு நட்சத்திரத்திற்கு ஹன்சிகா மோத்வானியின் பெயரை சூட்டி இருக்கிறார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தான் இந்த சர்ப்ரைஸ் கிப்ட்டை ஹன்சிகாவுக்கு வழங்கி இருக்கிறார்கள். 79.3 ஒளி வருடங்கள் தூரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரத்துக்கு ஹன்சிகா மோத்வானி என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதற்கான சான்றிதழை ஹன்சிகா தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.

இது பற்றி ஹன்சிகா கூறியிருப்பதாவது.. “உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் நட்சத்திரங்கள் மீது எவ்வளவு நாட்டம் கொண்டிருக்கிறேன் என்று. அதனால் எனக்கு சிறந்த குடும்பம் மற்றும் நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இதை விட சிறந்த பிறந்தநாள் கிப்ட் எனக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய பெயரை ஒரு நட்சத்திரத்திற்கு சூட்டியிருக்கிறார்கள். இதற்காக நான் நன்றி கூறிக் கொள்கிறேன்” என்று ஹன்சிகா பதிவிட்டிருக்கிறார்.

Related posts

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணக் குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது

தனுஷை பென்டெடுக்கும் பிரபுதேவா

சாவித்திரியின் வாழ்க்கை படத்தால் பிரிந்தது குடும்பம்