கேளிக்கை

ஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர்

(UTV|COLOMBO) – நடிகை ஹன்சிகா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இப்படத்தை இரட்டை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். இந்த படத்தில் ஹன்சிகாவுக்கு வில்லனாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இவர் இந்தியில் அக்ஸர் 2, மலையாளத்தில் டீம் 5 படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் ஹன்சிகா படம் மூலம் வில்லனாக அறிமுகமாகிறார். யோகிபாபு நடித்த ‘தர்மபிரபு’ பட தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார். காமெடி, பேய்ப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகின்றன.

Related posts

பிகில் பட பாடல்; அட்லீ திடீர் அறிவிப்பு

திடீரென பெயரை மாற்றிய சமந்தா

நயன்தாராவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்…