சூடான செய்திகள் 1விளையாட்டு

ஹதுருசிங்கவுடன் எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை -ஹரீன்

(UTVNEWS | COLOMBO) -இலங்கை அணியில் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவுடன் எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு அவர்களின் திறமையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுமாயின் பயிற்றுவிப்பாளர்களுக்கும் அவ்வாறே வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,2016-2018 ஆம் ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான கணக்காய்வு அறிக்கையை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஒப்படைத்தாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கடற்படையின் புதிய கடற்படை தளபதி நியமிப்பு…

எயிட்ஸ் நோயாளர்களைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

துப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உயிரிழப்பு