சூடான செய்திகள் 1

ஹட்டன் வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல்

(UTVNEWS|COLOMBO) – ஹட்டன் நகரத்தில் டன்பார் வீதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீயினால் குறித்த நிலையம் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இத் தீவிபத்தில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், விற்பனை நிலையத்தில் இருந்த புடவைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார், பிரதேசவாசிகள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபரொருவர் கைது

ரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தில்

நதீமல் பெரேராவின் இரத்த மாதிரியில் போதைபொருள் இல்லை