உள்நாடு

ஹட்டன் நகருக்கான நீர் விநியோகம் மட்டு

(UTV|கொழும்பு) – ஹட்டன் – சிங்கமலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால், ஹட்டன் நகருக்கான நீர் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

கடந்த சில நாட்களாக. சிங்கமலை வனப்பகுதியில் தீ பரவல் காரணமாக, குறித்த நீரேந்து பிரதேசம் வற்றிப்போயுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ஹட்டன் – டிக்கோயா இன்வரி பகுதியிலிருந்து பெறப்படும் நீரை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை 5 மணித்தியாலங்கள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தற்போது காணப்படும் நீரின் அளவு, குடிநீர் தேவைக்கு போதுமானதாக இல்லையென்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நேருக்கு நேர் மோதி 02 வேன்கள் விபத்து

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டிரம்புக்கு இலங்கையின் ஜனாதிபதி அநுர வாழ்த்துத் தெரிவிப்பு

editor

“கிடைத்த வாய்ப்பை சஜித் பயன்படுத்திக் கொள்ளவில்லை” குமார வெல்கம