அரசியல்உள்நாடு

ஹக்கீம், ஹலீம் கண்டிக்கு வேண்டாம் என போஸ்டர்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் SJB பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் ஆகியோருக்கு எதிராக அக்குரணை உள்ளிட்ட கண்டி மாவட்டத்தில் பல ஊர்களிலும் “ஹக்கீம், ஹலீம் கண்டிக்கு வேண்டாம்” என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் அக்குரணையில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த மு.க தலைவர் ஹக்கீமுக்கு எதிராக அக்குரணை ஊர் மக்கள் கோஷமெழுப்பிய நிலையில் இன்று இந்த போஸ்டர்களுக்கும் ஒட்டப்பட்டுள்ளன. 

அக்குரணையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளத்திற்கு தீர்வு தருவதாக கூறி பல தேர்தல்களிலும் வாக்குறுதி வழங்கி விட்டு மக்களை ஏமாற்றுவதாக கூறியே நேற்றைய தினம் பொதுமக்கள் ஹக்கீமுக்கு எதிராக கோஷமிட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

Related posts

திருகோணமலை கடலில் கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா விமானம் – வெளியான தகவல்

editor

எகிறும் ஒமிக்ரோன்

அமைச்சரின் மனைவியை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு