வகைப்படுத்தப்படாத

ஹகிபிஸ் புயல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – ஜப்பானில் ஹகிபிஸ் புயல் மற்றும் கடும் மழைக்கு 70 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புயலால் 5 லட்சம் வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளன. மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள், பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மூன்றாவது நாளாக இன்று மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 70ஐ நெருங்கி உள்ளதாக தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

பல பிரதேசங்களில் கடும் மழை

Case against Hemasiri, Pujith postponed till Oct. 03

லொட்டஸ் சுற்றுவட்டப் பாதை மூடல்