கேளிக்கை

ஸ்ரீ தேவிக்கு பூ.. எனக்கு தேங்காயா… இயக்குநரை அசிங்கப்படுத்தியமைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்ட டாப்ஸி

(UDHAYAM, COLOMBO) – இயக்குநரை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறும் நடிகை டாப்ஸி ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகை டாப்ஸியை அறிமுகப்படுத்தியவர் தெலுங்கு இயக்குநர் ராவேந்திர ராவ். இவர் 2010ஆம் ஆண்டு நடிகர் மனோஜை நாயகனாக வைத்து ‘ஜும்மன்டிநாடம்’ என்றத் திரைப்படத்தை இயக்கினார்.

இந்தத் திரைப்படத்தில் தான் நடிகை டாப்ஸி நாயகியாக அறிமுகமானார். ‘ஏம் சக்ககுன்னவ்ரோ…’ என்ற பாடலில் ஒருஇடத்தில் அவர் வயிற்றுப் பகுதி மீது பாதி தேங்காய் விழுவதுபோன்று காட்சி இருக்கும்.

அந்தப் பாடல் பற்றி கடந்த வாரம் ஒரு பேட்டியில் நடிகை டாப்ஸி கிண்டலாக பேசியுள்ளார். ‘ஸ்ரீPதேவி, ஜெயசுதா போன்ற நாயகிகளுக்கு பழங்கள், பூக்கள், எனக்கு மட்டும் சம்பந்தமேயில்லாமல் தேங்காயா?’, என அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

உடனே, தெலுங்கு ரசிகர்கள் பலரும் டாப்ஸிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். ராகவேந்திர ராவை அவர் அசிங்கப்படுத்திவிட்டதாகப் பலரும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், தான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என சமாதானப்படுத்த முயன்றார் டாப்ஸி. கடைசியில் தற்போது ஒரு மன்னிப்பு வீடியோவை வெளியிட்டுபலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார்.

இயக்குநர் ராகவேந்திர ராவ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. என்னை நானே தான் அந்த பேட்டியில் கிண்டல் செய்து கொண்டேனே தவிர அவரைப்பற்றி எதுவும் கூறவில்லை. நான் பேசியது யாருக்காவது வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால்அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

Related posts

கொலை வழக்கில் சிக்கினாரா பாவனா? விசாரணையில் திடுக் தகவல்கள்!

100 படங்கள் நடித்த பிறகே திருமணம்

ஆபாச காட்சியில் காஜல்