உள்நாடு

ஸ்ரீ ஜயவர்த்தனபுர விபத்து பகிடிவதையா என்பது தொடர்பில் விசாரணை [VIDEO]

(UTV|கொழும்பு) – ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றிற்கு இடையே மாணவன் ஒருவன் விபத்துக்குள்ளாகியமை தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, குறித்த சம்பவம் பகிடிவதையினை தொனியாகக் கொண்டு நடந்தேறியதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முகாமைத்துவ பேதத்தில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் பசிந்து ஹிருஷான் எனப்படும் மாணவனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளான்.

கனரக வாகனமொன்றின் டயர் ஒன்றை அவர் மீது உருட்டியபோது அது தலையில் பட்டு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மனநோய்க்கு சிகிச்சைக்கு சென்ற நபர் – அதிவேக நெடுஞ்சாலையில் தவறான திசையில் காரை ஓட்டியதால் கைது

editor

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடு ஜனவரி 09 ஆம் திகதி

editor

‘அம்பன்’ சூறாவளி வட கிழக்காக நகர்கிறது