சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமனம்

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு(03) நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த குறித்த கூட்டத்தில், தற்போதைய பொதுச் செயலாளர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாசவுக்குப் பதிலாக, தயாசிறி ஜெயசேகரவை பொதுச் செயலாளராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலராக பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச சில மாதங்களே பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மே மாதம் 7ஆம் திகதி பொதுவிடுமுறை

நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர குமார திசநாயக்க மறந்துவிட்டார்

editor

பசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது