உள்நாடு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணைந்த புதிய விமானம்!

(UTV | கொழும்பு) –

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகளில் அடிக்கடி இடம்பெறும் விமான கால தாமதம் மற்றும் விமானப் பயண தடை ஆகியனவற்றின் காரணமாக எயார்பஸ் ஏ-320 விமானத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாடகைக்கு பெற்றுள்ளது.

இந்த விமானம் நேற்று மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதிக வசதிகளுடைய இந்த விமானத்தில் 12 வர்த்தக பிரிவு இருக்கைகள் மற்றும் 138 பொருளாதார பிரிவு இருக்கைகள் உள்ளன. இந்த விமானம் எதிர்வரும் 29 ஆம் திகதி அன்று மாலைதீவுக்கு தனது முதல் விமான சேவையை வழங்கவுள்ளது.

இதன் மூலம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மொத்த விமானங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை மற்றுமொரு எயார்பஸ் விமானத்தை  வாடகைக்கு பெற நடவடிக்கை எடுத்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காய்கறிகள் விலை எதிர்பாராத வகையில் வீழ்ச்சி

ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமரின் கட்சி ஆதரவு

நாளை 10 மணி நேர நீர் வெட்டு