அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முந்தைய அரசாங்கம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்

Related posts

ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர் உரை

ஜனாதிபதியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்திய நபர் மீண்டும் விளக்கமறியலில்

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 60,425 பேர் கைது