சூடான செய்திகள் 1

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் சமையலறைக்கு சீல்…

(UTV|COLOMBO) பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் சமையலறைக்கு, நேற்று(05), சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரின் பணிப்புரையின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 450 ஆசிரியர் பயிலுநர்கள் கல்வி பயிலும் குறித்த கல்லூரியில், நாளாந்தம், இந்த சமையல் அறையிலிருந்தே சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன. குறித்த இந்த சமையல் அறை அசுத்தமாக காணப்படுவதால் பயிலுநர்கள் நாளாந்தம் நோய்வாய்ப்பட்டு வருவதாகவும் இது குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக, நேற்று இந்த சமையலறையினை சோதனை செய்ததாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

குறித்த கல்லூரியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட பயிலுநர் ஆசிரியர்கள் உணவு விசமானதில் நோய்வாய்ப்பட்டு கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த சமையலில் ஈடுபவர்களுக்கு இதனை மூன்று மாதங்களுக்கு சுத்தப்படுத்தப்பட வேண்டுமென எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சமையலறையை மீண்டும் திறக்கும் வரை, ஆசிரியர் பயிலுநர்களுக்கு, வெளியிலிருந்து சாப்பாடு பெற்றுக்கொடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Related posts

நலின் பெர்னாண்டோ இன்று நீதிமன்றில் முன்னிலை

வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் தண்டப் பணமானது அதிகரிப்பு

நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் வெற்றிபெற அட்டனில் விசேட வழிபாடு