கேளிக்கை

ஸ்ரீதேவி நடித்த கடைசி படம் வெளியானது

(UTV|INDIA)-நடிகை ஸ்ரீதேவி திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கியிருந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு இங்லிஷ் விங்லிஷ் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். ரீஎன்ட்ரியில் மீண்டும் பெரிய வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இந்தியில், பம்பாய் டாக்கிஸ், மாம் என இரண்டு படங்களில் நடித்தார். ஷாருக்கான் நடித்த ஜீரோ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் திடீரென்று கடந்த பெப்ரவரி மாதம் துபாய் சென்றபோது மரணம் அடைந்தார்.

ஷாருக்கானின் ஜீரோ படமே ஸ்ரீதேவி நடித்த கடைசி படமாக அமைந்தது. சமீபத்தில் அப்படம் திரைக்கு வந்தது. தனது ஒரிஜினல் கேரக்டரிலேயே, அதாவது நடிகையாகவே இப்படத்தில் நடித்துள்ளார். இதில் தீபிகாபடுகோன், கஜோல், ராணி முகர்ஜி, ஜூஹி சாவ்லா, கரிஷ்மா கபூர், அலியாபட், சல்மான் கான், மாதவன் ஆகியோரும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீதேவியுடன் கடைசியாக இப்படம் மூலம் இணைந்து நடித்திருந்தார் கரிஷ்மா கபூர். அவர் தனது இணைய தள பக்கத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்த புகைப்படத்தை வெளியிட்டு உருகியிருக்கிறார். அவர் கூறும்போது,’ஒரு சில நிமிடங்களே என்றாலும் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடிக்க ஜீரோ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஸ்ரீதேவி. அவரை இழந்து வாடுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை

“பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன்..”

ஆர்யாவின் ‘Teddy’ ஓடிடி தளத்தில்