கேளிக்கை

ஸ்ரீதேவிக்காக தன்னை தயார் படுத்தும் ரகுல் ப்ரீத் சிங்

(UTV|INDIA)-மறைந்த தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதை தேஜா இயக்குகிறார். இதில் என்.டி.ஆரின் வேடத்தில் அவரின் மகன் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்க அவரின் மனைவியாக வித்யா பாலன் நடிக்கிறார். சந்திரபாபு நாயுடுவாக ராணா, அவரின் மனைவியாக மஞ்சிமா மோகன், சாவித்திரியாக நித்யா மேனன் நடிக்கின்றனர்.

தற்போது மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சவாலாக ஏற்ற ரகுல், ஸ்ரீதேவியின் உடல்மொழி, முக பாவனைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அவர் நடித்த படங்களைப் பார்த்து வருகிறார்.

ஸ்ரீதேவிக்கு நெருக்கமானவர்களிடம் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து வருகிறார். முதலில் சினிமா, அரசியல் என இரண்டையும் ஒரே படமாக எடுக்க திட்டமிட்ட படக்குழு இப்போது இரண்டு பாகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். சினிமா வாழ்க்கை அடங்கிய பாகத்துக்கு `கதாநாயகுடு’ என்றும் அரசியல் வாழ்க்கையைச் சொல்லும் பகுதிக்கு ‘மகாநாயகுடு’ என்றும் பெயரிட்டுள்ளனர். இரண்டுமே 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வதந்தி பரப்பியவர்கள் மீது கோபப்பட்ட தீபிகா…

சார்மி எடுத்த அதிரடி முடிவு…

பக்ருவுக்கு கொரோனா தொற்று