விளையாட்டு

ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்க முடியாது-அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

(UTV|AUSTRALIA)-பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது.

பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி வரை சுமித், வார்னர் மீதான தடை இருக்கிறது. பான்கிராப்ட் மீதான தடை டிசம்பர் 29 ஆம் திகதியுடன் முடிகிறது.

இந்த தடை கடுமையானது. அதை நீக்க வேண்டும் என்று வீரர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. அவுஸ்திரேலிய அணி சமீப காலமாக தோல்வியை தழுவி வருகிறது. இதனால் ஸ்மித், வார்னர் மீதான தடை இந்திய தொடரில் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர். பான்கிராப்ட் ஆகியோர் மீதான தடை நீக்கம் செய்யப்படமாட்டாது என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

தடை அதே நிலையில் இருக்கும் என்று கூறி வீரர்கள் சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது.

 

 

 

 

Related posts

சர்வதேச கிரிக்கட் தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்த தீர்மானம்

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை வருகிறது

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க