சூடான செய்திகள் 1

ஸ்மார்ட் சாரதி அனுமதிப் பத்திரத்தினை அரசுக்கு பொறுப்பேற்குமாறு பணிப்பு

(UTVNEWS | COLOMBO) – ஸ்மார்ட் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கிய ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களம் எடுத்த தீர்மானத்தினால் அரசுக்கு 4பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக பொதுக் கணக்குகள் குழுவின் விசாரணைகளில் தெரிய வந்தது.

குறித்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஏழு வருட ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் மேலும் இரண்டு வருடங்கள் அந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்குப் பாரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பது நேற்று(04) விசாரணைகளில் வெளியானது.

அதன்படி, ஸ்மார்ட் சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடமிருந்து உடனடியாகத் திணைக்களம் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண எம்பி மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகியோர், மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோருக்குப் பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டாம் தவணை ஆரம்பமாகும் முன்னர் சிரமதான நடவடிக்கைகள்-கல்வியமைச்சு

இன்றைய தினம் இரண்டாவது இடைக்கால அறிக்கை சட்டமா அதிபரிடம்

புலிகள் மீதான தடையை நீக்குமாறு முன்னாள் போராளிகள் கோரிக்கை