உலகம்

ஸ்பெய்னில் ஒரே நாளில் கொரோனாவால் 769 பேர் பலி

(UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 769 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இறப்பு எண்ணிக்கை 4,858 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,059 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலிக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது மிக மோசமாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் உள்ளது

இந்நிலையில், உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 559,432 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 25,045 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் 128,706 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடரும் மோதல்

நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு

வெளிநாட்டு பயணிகளுக்கான தடையை நீக்கியது இந்தியா