உலகம்

ஸ்பெயினில் துக்க தினம் அனுஷ்டிப்பு

(UTV| கொழும்பு)- ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, 10 நாட்களுக்கு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச பேச்சாளர் மரியா ஜேசுஸ் மொன்டெரோ ( Maria Jesus Montero) தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடு முழுவதிலும் உள்ள பொதுக் கட்டடங்கள் , கடற்படையின் கப்பல்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் 283,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 27,117 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

(VIDEO) துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பிரபல தேரர் ஜப்பானில் கைது!

ஈரான் செல்லும் அலி சப்ரி!

இங்கிலாந்திலும் அவசர நிலை பிரகடனம்