உலகம்

ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் வரையில் நீடிப்பு

(UTV | கொவிட் -19) – கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு மே 9-ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகில் உள்ள 210-க்கும் அதிகமான நாடுகளில் பரவி பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரசின் தாக்கத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து இத்தாலியும், ஸ்பெயினும் இருந்து வருகிறது.
இதுதொடர்பாக, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ஷே கூறுகையில், கொரோனா வைரசின் தாக்கல் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த இங்கு ஊரடங்கு உத்தரவு மே 9-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 20,639 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனாவுடனான தனது எல்லையை மூடுகிறது ரஷ்யா

டிசம்பரில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அறிமுகம்

டெல்லி வன்முறை – ஐ.நா மனித உரிமைகள் கவலை