உள்நாடு

‘ஸ்பூட்னிக் வி’ : 3ம் கட்ட ஆராய்ச்சி ஆரம்பம்

(UTV | ரஷ்யா) – ‘ஸ்பூட்னிக் வி’ என்ற பெயரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட தடுப்பூசி குறித்த ஆராய்ச்சியின் மூன்றாம் கட்டம் 7-10 நாட்களில் தொடங்க உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்றால் இதுவரை 2.20 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.76 லட்சம் பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நான்கு நாடுகள் பட்டியலில் ரஷ்யா 4வது இடத்தில் உள்ளது. ரஷ்யா மொத்தம் 917,884 பேருக்கு தொற்று பாதித்துள்ளது, இதில் 15,617 பேர் பலியாகிவிட்டனர். 729,411 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பதால் ரஷ்யா, கொரோனா பரவலை தடுக்க மருத்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது. ரஷ்ய சுகாதார அமைச்சத்தின் கமலேயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இதை ஆகஸ்ட் 12ம் திகதி ரஷ்ய அதிபர் புதின் அறிமுகம் செய்து வைத்தார். முதல்கட்டமாக மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க தனது மகளுக்கு அந்த தடுப்பூசியை ஏற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா : மரணிக்கும் முஸ்லிம்களது உடல்களை கட்டாய தகனம் செய்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் [VIDEO]

 கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

“அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதால் இராஜினாமாவுக்கு அவசியமில்லை”