உள்நாடு

ஸ்பா நடத்துவதில் புதிய சட்டம்

(UTV | கொழும்பு) –  ஸ்பா நடத்துவதில் புதிய சட்டம்

இலங்கையில் ஆயுர்வேத ஸ்பாக்களை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுதேச மருத்துவ கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல ஆயுர்வேத ஸ்பாக்கள் விபச்சார விடுதிகளாக இயங்கி வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஆயுர்வேத ஸ்பாக்கள் உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்பட வேண்டும்மேலும் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று கூறிய அவர் தற்போது இயங்கிவரும் ஸ்பாக்கள் கவுன்சிலிலோ அல்லது சுற்றுலா வாரியத்திலோ பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் , ஸ்பாக்களில் பணியாற்றும் ஆயுர்வேத சிகிச்சையாளர்கள் பலர் பயிற்றுவிக்கப்படாதவர்கள் என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆயுர்வேத திணைக்களம் ஆயுர்வேத சிகிச்சையாளர்களாக மாற ஆர்வமுள்ளவர்களுக்கு தேசிய தொழில் தகுதி (NVQ) நிலை 4 சான்றிதழைப் பெறுவதற்கு வழிவகுக்கும் புதிய நான்கு மாத பாடநெறியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 41 பேர் குணமடைந்தனர்

வவுனியாவில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்: 36 வயதுடைய தந்தை கைது