விளையாட்டு

ஸ்காட்லாந்தை வீழ்த்தியது நமீபியா

(UTV | துபாய்) –  டி20 உலகக் கிண்ண தொடரில் இன்று இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, நமீபியா அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற நமீபியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக மைக்கேல் லீஸ்க் 44 ஓட்டங்களை சேர்த்தார்.

இதையடுத்து 110 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் கிரேக் வில்லியம்ஸ் 23 ஓட்டங்களும், மைக்கேல் வேன் 18 ஓட்டங்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர்.

ஷேன் கிரீன் (9), கேப்டன் எராஸ்மஸ் (4) ஆகியோர் விரைவில் விக்கெட்டை இழந்தனர். அணியின் ஸ்கோர் 102 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது, டேவிட் வீஸ் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தார். கடைசி ஓவரில் ஒரு ஓட்டம் தேவை என்ற நிலையில், ஸ்மித் முதல் பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். அவர் 32 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

5 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியா அணி வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரூபன், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related posts

சர்வதேச அளவில் 100-வது கோல் அடித்த ரொனால்டோ

நான்காவது முறையாகவும் ஸ்பெயின் அணி செம்பியன்.

46-வது வயதிற்குள் அடியெடுத்தும் வைக்கும் சச்சின்