உள்நாடுசூடான செய்திகள் 1

ஸாகிரா கல்லூரி A/L பெறுபேறு பிரச்சினைக்கு இந்த வாரம் தீர்வு : கல்வியமைச்சர்

அண்மையில் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில் குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான சாஹிரா கல்லுாரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் திட்டமிட்ட  இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படும் எனவும், அதற்கான தீர்வு இவ்வாரம் வழங்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் இன்று (05) பாராளுமன்றில் பதிலளித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், தெளபீக், முஷாரப் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் இது தொடர்பில் நேற்று (04) பாராளுமன்றில் உரையாற்றிருந்தார்கள் அது போல் இன்றைய நாள் (05) முஜீபுர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம், ஹரீஸ் ஆகியோரும் உரையாற்றி இருந்தனர்.

ஆகவே இந்த வாரம் இது தொடர்பிலான பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் எனவும் மாணவர்களுக்கு சாதகமான பதில் கிட்டும் எனவும் கல்வியமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திக்கு

Related posts

பாராளுமன்ற உறுப்பினரின் மகன் உள்ளிட்ட அறுவருக்கு பிணை

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு