உள்நாடுசூடான செய்திகள் 1

பஷில் ராஜ­பக்ஷவினால் இந்த பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும் : பசிலை சந்தித்த நசீர் அஹமட்

அமெ­ரிக்­காவில் தங்­கி­யி­ருந்து இலங்­கைக்கு வந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவை பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள அவ­ரது இல்­லத்­துக்குச் சென்று முன்னாள் சுற்­றா­டல்­துறை அமைச்சர் நஸீர் அஹமட் சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்ளார்.

இந்த சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த நஸீர் அஹமட், நாட்டில் எதிர்­வரும் நாட்­களில் ஜனா­தி­ப­தித் ­தேர்­தலோ அல்­லது பொதுத்­தேர்­தலோ இடம்­பெற்றால் அதற்கு எவ்­வாறு முகங்­கொ­டுப்­பது சம்­பந்­த­மான மிக நீண்ட கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. நாட்டில் இடம்­பெ­ற­வுள்ள தேர்­தல்கள் மிக முக்­கி­ய­மா­னவை. குறிப்­பாக ஜனா­தி­ப­தி­தேர்­தலில் நாட்டு மக்கள் விரும்­பக்­கூ­டிய மற்றும் மிகவும் நம்­பிக்­கை­யான வேட்­பாளர் ஒருவர் நிறுத்­தப்­ப­ட­வேண்டும்.

நாட்டை கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய திற­மை­யான, நம்­பிக்­கை­யான ஒருவர் தேவைப்­ப­டு­கிறார். அவ்­வா­றான சிறந்த தலை­மைத்­து­வத்தை கொண்ட ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும். என்­னு­டைய பார்­வையில் பஷில் ராஜ­பக்ஷவினால் இந்த பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். அந்த நம்­பிக்கை எம்­மி­டத்தில் உள்­ளது.

இதன்­போது, “நீங்கள் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டதை தொடர்ந்து எதிர்­கா­லத்தில் பஷி­லுடன் இணைந்து செயற்­பட போகி­றீர்­களா?” என ஊட­க­வி­ய­லா­ளர்கள் அவ­ரிடம் கேள்வி எழுப்­பினர்.

இதற்கு பதி­ல­ளித்த நஸீர், “நாம் நீண்­ட­கா­ல­மாக பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறோம். எமது கட்­சி­யான ஐக்­கிய ஜன­நா­யக முன்­னணி சார்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தேர்தலில் எவ்வாறு செயல்படுவது, யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது” என்றார்.

இது தொடர்பில் ஹாபீஸ் நஸீர் தெரிவித்த கருத்தை பார்க்க வீடியோ:

Related posts

(UPDATE)-கோட்டா CID யில் ஆஜர்

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்வு

பல்கலைக்கழக நுழைவுக்கான Z புள்ளி இந்த வாரம் வெளியீடு