கேளிக்கை

ஷாருக்கானுடன் கைக்கோர்த்த அட்லீ?

(UTV|INDIA) நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்து மிக பெரும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்த படத்தை அட்லீ இயக்கியிருந்தார்.

இப்படத்தின் மாபெரும் வெற்றியினால் மெர்சல் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது என சமீப காலமாகவே கூறிவந்தனர். மேலும் இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் ஷாருக்கான் நடிக்கவுள்ளார், இந்தியிலும் இப்படத்தை அட்லீயே இயக்கவுள்ளார் என்று நேற்று தகவல் ஒன்று கிடைத்தது.

இந்நிலையில் இத்தகவல் உண்மை தான் என்பது போல சென்னை சேப்பாக்கத்தில் நடந்துவரும் CSK- KKR போட்டியில் அட்லீயும் ஷாருக்கானும் அருகருகில் அமர்ந்துள்ளனர். இதனால் அட்லீ தற்சமயம் பிசியாக இருக்கும் தளபதி-63 படத்திற்கு பிறகு மெர்சல் இந்தி ரீமேக்கை கண்டிப்பாக எதிர்ப்பார்க்கலாம்.

 

 

 

 

Related posts

tiktok இல் குதுகலமாக இருக்கும் திரிஷா(VIDEO)

பிரபல மொடல் அழகி கொலை…

Coming Soon