சூடான செய்திகள் 1

ஷாபிக்கு எதிராக விசாரணை இன்று

 

(UTV|COLOMBO)- குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இதன்போது தாய்மார்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விஷேட வைத்தியர்களின் ஆலோசனைகளுடன் கூடிய அறிக்கை ஒன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுமதியற்ற முறையில் வைத்தியர் ஷாபி 11 தாய்மார்களுக்கு எல்.ஆர்.டீ சத்திரிகை சிகிச்சை செய்ததாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று பல்வேறு அமைப்புக்கள் ஒன்றிணைந்து வைத்தியர் ஷாபிக்கு எதிராக வைத்திய சபைக்கு மறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்தனர்.

Related posts

மன்னார் எருக்கலம்பிட்டி, பாதைக்கு 18 கோடி ஒதுக்கீடு

சிலாவத்துறை வீட்டுப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு!

சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு – எந்தவொரு கட்சிக்கும் அழைப்பில்லை