சூடான செய்திகள் 1

ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த தாய்மார்கள் எவரும், பலோபியன் சிகிச்சைக்கு வரவில்லை

(UTVNEWS | COLOMBO) -வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த தாய்மார்களில் எவரும், பலோபியன் குழாய் சத்திர சிகிச்சைக்கு முன்வரவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தி பெரேரா தெரிவித்தார்.

குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் கருத்தடை செய்ததாக முறைப்பாடு செய்த தாய்மார்களை பரிசோதனைக்குட்படுத்த தேவையான வசதிகள் கொழும்பு காசல் ஆஸ்பத்திரி மற்றும் த சொய்சா வைத்தியசாலைகளில் என்பவற்றில் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இது வரை எந்த ஒரு தாயும் முன்வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஆசிரியர்கள் இருவர் இணைந்து செய்த காரியம்…

மூன்றாவது தவணையை வெளியிடுவதற்கு IMF இன்றுஅனுமதி ?

எவன்காட் வழக்கு – இடைக்கால தடை