உள்நாடு

ஷானி தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து நீதியரசர் யசந்த கோதாகொட விலகல்

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட இன்று(10) விலகியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, CID யினால் மீண்டும் கைது செய்யப்படுவதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவைக் கோரி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

2019 ஏப்ரல் 21 அன்று நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாசிமை உரிய முறையில் விசாரிக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பி அறிக்கையின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்ய முயற்சிப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் அபேசேகர தனது விண்ணப்பத்தில் கோரியுள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.துரைராஜா, மஹிந்த சமயவர்தன, மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதியரசர் யசந்த கோதாகொட விண்ணப்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து, வழக்கு 2022 ஏப்ரல் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீந்திர செனவிரத்னவும் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த விண்ணப்பமும் ஏப்ரல் 7, 2022 அன்று பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுக்களை பரிசீலித்த உச்சநீதிமன்றம், ஏப்ரல் 7ம் திகதி மனுக்களை பரிசீலிக்க முடிவு செய்தது.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாசிமை உரிய முறையில் விசாரிக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பி அறிக்கையின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்ய முயற்சிப்பதைத் தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் தனது விண்ணப்பத்தில் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காசா சிறுவர் நிதியத்திற்கு 127 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது!

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது – பிரதமர் ஹரிணி

editor

ஜனாதிபதி அநுரவுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள் – சபாநாயகர்

editor