உள்நாடு

ஷானி அபேசேகர விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- கைது செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேக ரகம்பஹா நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெலிவேரிய பகுதி ஆயுத கிடங்கு விவகார விசாரணைகளில், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு உண்மைக்கு புறம்பான சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்!!

அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கை!

கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி