சூடான செய்திகள் 1

ஷாந்த சிசிர குமார மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) புத்தளம் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த சிசிர குமார எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபேசேகர சாந்த சிசிர குமார கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக கூட்டமொன்றை நடத்தி, துப்பாக்கியொன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஷாந்த சிசிர குமாரவை சிலாபம் மேல் நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு பிணையில் விடுவித்தது.

பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர் 2013 ஆம் ஆண்டு பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.

பிணை நிபந்தனைகளுக்கு அமைய அவர் செயற்படவில்லை என பொலிஸாரிடம் சிலாபம் மேல் நீதிமன்றம் கோரிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கமைய, பிணை உத்தரவை இரத்து செய்த சிலாபம் மேல் நீதிமன்றம், சாந்த சிசிர குமாரவை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டது.

Related posts

மீண்டும் 5ம் திகதி ஜனபலய கொழும்புக்கு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிபுறக்கணிப்பில்

ஹரினின் தந்தை காலமானார்