சூடான செய்திகள் 1

ஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களை எட்டி உதைத்தது

இன்று புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ சுமந்திரன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த பதிவில், கடுமையான யுத்த குற்றங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழ் மக்களுக்கு செய்த அவமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது எம்.ஏ சுமந்திரன் இந்த நியமனம் தமிழ் மக்களை எட்டி உதைத்தது போல கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 21ஆம் திகதி மீண்டும் திறப்பு

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்காக 2 கதிர்வீச்சி சிகிச்சை இயந்திரங்கள்

“ஒற்றுமையின் மூலம் சமூகத்திற்கெதிரான சதிகளை முறியடிப்போம்” மாவடிப்பள்ளியில் அமைச்சர் ரிஷாட்!