வகைப்படுத்தப்படாத

ஷனில் நெத்திகுமாரவுக்கு பிணை

(UTV|COLOMBO)-மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில், சாட்சியாளர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுத்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஷனில் நெத்திகுமார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு அமைய, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய ஷனிலை, ஒன்றறை இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவரை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த, அனிகா விஜேசூரியவின் சகோதரரான விஜித் விஜேசூரியவை அச்சுறுத்திய விவகாரம் தொடர்பில், ஷனில் நெத்திகுமாரவுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

England beat India for crucial win

கடலில் மூழ்கிய இலங்கையரை மீட்ட தமிழக மீனவர்கள்

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்…ஆசிரியர் அடித்துக்கொலை!