உள்நாடுசூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று

(UTV|கொழும்பு)- ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணியின் முதலாவது கூட்டம் இன்று(18) இடம்பெறவுள்ளது.

கூட்டணியின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பின் பிரதித் தவிசாளர் அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கட்சியின் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் கட்சியின் பொதுச் செயலாளராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகள் இன்றைய தினம் இடம்பெறாது

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை