உள்நாடு

ஶ்ரீலங்கன் விமான சேவையைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் தம்பிக்க!

பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் முதற்தர செல்வந்தருமான தம்மிக்க பெரேரா (Dhammika Perera), ஶ்ரீலங்கன் விமான சேவையைக் (sri lankan airlines) கொள்வனவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இலங்கையின் தேசிய விமான சேவையான ஶ்ரீலங்கன் விமான சேவையை தனியார் முதலீட்டாளரிடம் கையளிப்பதற்கான விருப்ப மனுக் கோரல் அண்மையில் முடிவடைந்திருந்தது.

இந்நிலையில் ஶ்ரீலங்கன் விமானசேவையை கொள்வனவு செய்வதற்காக ஏழு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. அவற்றில் தம்மிக்க பெரேரா, 51 வீதப் பங்குகளைக் கொண்டுள்ள ஹேலீஸ் நிறுவனமும் உள்ளடங்கியுள்ளது.

தற்போது ஶ்ரீலங்கன் விமான சேவையைக் கொள்வனவு செய்வதற்கு பின்வரும் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

1. AirAsia Consulting Sdn. Bhd.

2. Dharshaan Elite Investment Holding (Pvt) Ltd

3. FITS Aviation (Private) Limited

4. Sherisha Technologies Private Limited

5. Treasure Republic Guardians Limited

6. Hayleys PLC

Related posts

ஜீவன் தொண்டமான் உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகத் தலைவராக தெரிவு

கொழும்பில் முடக்கப்பட்டுள்ள இடங்களின் விபரம்

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது