சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் விமான சேவைகள் தொடர்பான அமைச்சரவை குழுவின் அறிக்கை

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கன் விமான சேவைகள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவின் அறிக்கையை இன்று(28) ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் எரான் விக்ரமரத்னவின் தலைமையிலான குழு இந்த விசாரணையை மேற்கொண்டதாகவும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

அந்நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பான கொள்கை ரீதியான பரிந்துரைகள் பலவற்றை உள்ளடக்கி, விசாரணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

கொலை குற்றவாளியானார் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்

சீகிரிய குன்றை இலவசமாக பார்வையிடுவதற்காக வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவு

கிராமம், நகரம் என்ற பேதமின்றி வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் ;வவுனியா தரணிக்குளத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…