சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா மோசடி தொடர்பான அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

(UTV|COLOMBO) – மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இன்று(02) ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்ததுடன் இன்று அதன் அறிக்கை ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம்

வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைக்கு சஜித்திடம் தீர்வு

பாராளுமன்ற உறுப்பின் பதவி எதற்கு? விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சுவரொட்டிகள்