வகைப்படுத்தப்படாத

ஶ்ரீதேவியின் பூதவுடல் சிறப்பு விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது

(UTV|INDIA)-டுபாயில் உயிரிழந்த நடிகை ஶ்ரீதேவியின் பூதவுடல் சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஶ்ரீதேவியின் பூதவுடல் டுபாயில் இடம்பெற்ற மரண விசாரணையின் பின்னர் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டுபாய் பொதுவழக்காடு மன்றம் குறித்த வழக்கை நிறைவு செய்ததை தொடர்ந்து ஶ்ரீதேவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நடிகை ஶ்ரீதேவியின் உடல் மும்பை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுவிட்டது என்பதை அறிந்தவுடன் பெருந்திரளானவர்கள் மும்பையில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன் திரண்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நடிகை ஶ்ரீதேவியின் உடலுக்கு இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மின்முறையில் எரியூட்டப்படாமல் பாரம்பரிய முறையில் இறுதிச் சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நடிகை ஶ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என பாஜகவின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக டுபாய் சென்றிருந்த நடிகை ஶ்ரீதேவி, கடந்த சனிக்கிழமை இரவு குளியல் தொட்டிக்குள் தவறி வீழ்ந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கால நிலை சீர்கேடு அதிகபனிமூட்டம் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

அமெரிக்க , வட கொரிய தலைவர்கள் உத்தியோகபூர்வமாக சந்தித்தனர்.

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த சில வழிகள்