கேளிக்கை

வைரலாகும் விஷாலின் ‘லத்தி’ [VIDEO]

(UTV |  சென்னை) – நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘ஆம்பள’, ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘சக்ரா’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

‘வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் ‘லத்தி’. இதனை புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். ‘ராணா புரொடக்ஷன்’ சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் 24-07-2022 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவித்தபடி ‘லத்தி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. விஷாலுக்கு உரித்தான ஆக்‌ஷன் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

‘பிரண்ட்ஷிப்’ திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியானது [VIDEO]

புதிய பட அறிவிப்பை வெளியிட்ட ஜீவா

சூர்யா 37′ டைட்டில் ரிலீஸ் திகதி மற்றும் நேரம் அறிவிப்பு