கேளிக்கை

வைரலாகும் தனுஷின் ‘இங்கிலீசு லவுசு’

(UTV|INDIA) தனுஷ் நடித்த ‘3’ படத்தில் அவர் பாடிய ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடல் உலகம் முழுவதும் வைரலானது என்பது தெரிந்ததே. அதேபோல் வெளியாகியுள்ள தனுஷின் ‘பக்கிரி பட பாடலான ‘இங்கிலீசு லவுசு’ பாடலும் தற்போது வைரலாகி வருகிறது.

தனுஷ் நடித்த ஆங்கில படமான ‘எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ என்ற படம் ஏற்கனவே பல நாடுகளில் ரிலீஸ் ஆகி வெற்றி அடைந்த நிலையில் தற்போது இந்த படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற டைட்டிலில் வரும் 21ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி அமித் திரிவேதி இசையில் மதன் கார்க்கி பாடல் வரிகளில் தனுஷும் ஜோனிதா காந்தியும் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது. ‘ஒய் திஸ் கொலைவெறி’ போன்றே எளிமையான வார்த்தைகளில் இந்த பாடல் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நூலிழையில் உயிர் தப்பித்த பிரபல நடிகர்!

2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்

விராட் கோலியாக நடிக்கும் துல்கர்