கேளிக்கை

வைரலாகும் ‘அயலான்’

(UTV | கொழும்பு) – ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘நேற்று இன்று நாளை’ திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரித் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் மேக்கிக் வீடியோ வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் மூலம் வித்தியாசமான கதைகளத்தோடு சினிமாவிற்கு வந்தவர் ரவிக்குமார். இவரின் அடுத்த படைப்பாக கடந்த ஓராண்டாக ‘அயலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு அண்மையில் ‘அயலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் டப்பிங் வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.

‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தினை போல ‘அயலான்’ படமும் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி உள்ளது. இதற்காக அதி நவீன தொழில்நட்பத்தை பயன்படுத்தி பல்வேறு கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. சிவகார்த்திகேயன் உடன் கருணாகரன், பாலசரவணன், பானுப்பிரியா, யோகி பாபு உட்பட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கபடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ‘அயலான்’ படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயனுக்கு கதையை விளக்குவதை போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் குஷியாகியுள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்கள், தற்போது இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Related posts

தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்

இந்தியன் -2வில் கமலுடன் இணையும் துல்கர்

நடிகையாகிறார் பிரபல விளையாட்டு வீராங்கனை?