உள்நாடு

அவசர சிகிச்சைக்காக 48 மணி நேரத்தில் வைத்திய முகாம்[PHOTO]

(UTV|கொழும்பு ) – சீனாவிலிருந்து இலங்கை திரும்பும் பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக 48 மணி நேரத்திற்குள் இலங்கை இராணுவம் வைத்திய முகாம் ஒன்றை அமைத்து வருகின்றது.

இம் முகாம் தியத்தலாவ இராணுவத்தின் எஸ்.எஸ். கமாண்டோர் மேஜர் ஜெனரல் வடுகே தலைமையில் இரண்டு அறைகள் கொண்ட வைத்திய முகாமை 48 மணி நேரத்தில் தியத்தலாவ இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர்.

இந்த வைத்திய முகாமில் சீனாவிலிருந்து வரும் மாணவர்கள் இரண்டு வாரங்கள் தங்கவைக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தபடுவார்கள்.

சீனாவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகின்றது. இதனையடுத்து, உலக நாடுகள் தங்களது நாட்டு பிரஜைகளை அழைத்து வருகின்றது. அந்த வகையில் அங்கு பல்கலைகழகங்களில் பயின்ற இலங்கை மாணவர்களையும் அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

அவ்வாறு அழைத்து வருபவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பாமல் தியத்தலாவை இராணுவ வைத்தியசாலை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள வைத்திய முகாமில் தங்க வைத்து இரு வாரங்கள் பரிசோதித்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றிலேயே ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் வைத்திய முகாம் அமைக்கபடுகின்றமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

Related posts

IMF உதவியைப் பெற அமைச்சரவை இணக்கம்

விபத்தில் படுகாயமடைந்த உபபொலிஸ் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை வௌியிட்ட இலங்கை மின்சார சபை

editor