உள்நாடு

வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மன்னார் மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட விருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வைத்தியசாலையில் பணிபுரிவோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்திற்கும் நடவடிக்கை இதுவரையில் எடுக்கப்படாத சூழலில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தனர்.

அந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தால், மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைந்து, வீடிழந்து, உதவிகள் இன்றி தவித்து நிற்கும் மக்களை வஞ்சிக்கும் எண்ணம் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தாற்காலிகமா இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அத்துடன் ஒரு சில குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் மேல் மட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

இம்ரான் கானிடம் 13 வயது இலங்கை சிறுவன், விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோள் [VIDEO]

10 புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்!

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம்