கேளிக்கை

வைத்தியராக அமலாபால்…

(UTV|INDIA) ‘ராட்சசன்’ படத்திற்கு பிறகு அமலாபால் நடிப்பில் அதோ அந்த பறவை போல, ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆடை படத்தில் அமலா பாலின் தோற்றம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தி நடிகைகளை மிஞ்சும் வகையில் ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியாக இதில் நடிக்கிறார். இந்த படம் அமலா பாலுக்கு வித்தியாசமான படமாக அமையும் என்று படக்குழு கூறியுள்ளது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தில் உள்ளன. விரைவில் அடுத்தடுத்து இவை திரைக்கு வர இருக்கின்றன.
அமலாபால் அடுத்ததாக மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்துக்கு ‘கேடவர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அனுஷ் பிள்ளை என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இந்த படம் திகில் கலந்த சஸ்பென்ஸ் படமாக தயாராகிறது. இந்த படம் கேரளாவில் ஒரு டாக்டர் கையாண்ட வழக்கின் உண்மை கதையாகும். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் வேடத்தில் அமலாபால் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் நடக்கிறது. கேடவர் படத்தை தமிழிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

 

 

Related posts

கதாநாயகியாக அறிமுகமாகும் கல்பனாவின் மகள்

பாயல் கோஷ்க்கு வந்த சோதனை

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் ஏ.ஆர்.ரகுமான்