உள்நாடு

வைத்தியசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்த நடவடிக்கை

(UTV | ஜெனீவா) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைப் பெற்றுவரும் வைத்தியசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்திருந்தார்.

தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நோயாளர் ஒருவர் நேற்று அதிகாலை தப்பிச்சென்ற நிலையில் குறித்த நபர் பாதுகாப்பான முறையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலைகளில் இருந்து நோயாளர்கள் தன்னிச்சையாக வெளியேறும் சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்

Related posts

பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!

மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க – ஹரீஸ் நடவடிக்கை