உள்நாடுபிராந்தியம்

வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தவறான முடிவெடுத்த பட்டதாரி இளைஞன்

வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் பட்டதாரி இளைஞன் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமொன்று நேற்று (04) இடம்பெற்றுள்ளது.

கைலாய பிள்ளையார் வீதி, கோவில் வீதி, நல்லூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான தங்கவேல் விதுசன் என்ற வேலையில்லா பட்டதாரி இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்.

இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் அன்றையதினம் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்

ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகம் நியமனம்

editor

ஆசிரியர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் அடுத்து வாரம்