உள்நாடு

வேலை இழந்த போதிலும் சப்புகஸ்கந்த ஊழியர்களுக்காக மாதாந்தம் 100 மில்லியன் ரூபா செலவு

(UTV | கொழும்பு) –  சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படாமையால், அதன் ஊழியர்கள் கடமைகள் எதுவுமின்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்காவிட்டாலும், பணியாளர்கள் நாளாந்தம் பணிபுரிவதாகவும், இதற்காக மாதாந்தம் சுமார் 100 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக புதைபடிவ எரிபொருள்கள், விமான எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் உற்பத்திக்கான வாய்ப்புகள் இருந்திருக்கும் என அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையர் ஒருவர் பலி

நுவரெலியா பிரதான வீதியில் கார் விபத்து!

கிறிஸ்மஸ் தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட மதுபான விற்பனைக்கு கோரிக்கை