உள்நாடு

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விரைவில் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

(UTV|கொழும்பு) – வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் செயற்பாடு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, நியமனம் வழங்குவதற்கு தகுதிபெற்றுள்ள 42,000 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நியமனம் வழங்கப்பட்டுள்ள திகதியிலிருந்து 3 நாட்களுக்குள் குறித்த நபர், பிரதேச செயலாளரை சந்திக்க வேண்டும் எனவும் 7 நாட்களுக்குள் பயிற்சிக்கு சமூகமளிக்காவிட்டால், நியமனம் இரத்துச் செய்யப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டதாரிகளுக்கு 20,000 ரூபாய் கொடுப்பனவின் கீழ் ஒரு வருட பயிற்சி வழங்கப்படும் எனவும் அதன்பின்னர் ஓய்வூதியம் உள்ளடங்கலாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களை அடிப்படையாக வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்படுவதுடன், நியமனம் கிடைக்கும் மாவட்டத்தில் 5 வருடங்கள் கட்டாயமாக சேவையாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா : 323 பேர் சிக்கினர்

பரசூட் பறக்கும் போட்டியில் இராணுவ வீரர் சாதனை

சாரதி உரிமம் வைத்திருப்பவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு