சூடான செய்திகள் 1

வேதனப் பிரச்சினையில் பிரதமர் நேரடி தலையீடு

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் தொடர்பில் பிரதமர் மகிந்தராஜபக்ஷவிற்கும், பெருந்தோட்ட நிறுவனங்களது உரிமையாளர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நாளை வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

தங்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரித்து வழங்குமாறு பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், இந்த முறை 1000 ரூபாய் நாளாந்த அடிப்படை வேதனம் பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்துள்ளன.

எனினும் 600 ரூபாவிற்கு மேல் நாளாந்த அடிப்படை வேதனத்தை அதிகரிக்க முடியாது என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்தநிலையில் பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் தாம் இதுதொடர்பில் நாளையதினம் கலந்துரையாடுவதாக, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நேற்று இரவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானை சந்தித்த போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை வேதனம் பெற்றுத் தரப்படுமாக இருந்தால், அவர்களை வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று எமது செய்தியாளரிடம் வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

மரண தண்டனைக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய 05 நீதிபதிகள் கொண்ட குழு

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய ஐவர் கொண்ட ஆணைக்குழு நியமனம்