அரசியல்உள்நாடு

வேண்டும் ரணில்! மீண்டும் ரணில்! தேர்தல் பிரச்சாரம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில், 2024 ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் கௌரவ ரணில் விக்ரமசிங்ஹ அவர்களை ஆதரித்து மாத்தளை மாவட்டத்தின் ஓபல்கல மற்றும் ஹுணுகல ஆகிய இடங்களில் புதன்கிழமை  (11) “வேண்டும் ரணில், மீண்டும் ரணில்” ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

மேலும், இப் பிரச்சார கூட்டங்களில் மாத்தளை மாவட்ட நகர்ப்புற மற்றும் தோட்டங்களை உள்ளடக்கிய வகையிலான பெருந்திரலான மக்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.

இப்பிரச்சார கூட்டங்களில் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், இராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், இ.தொ.கா உபத்தலைவருமான முத்துசாமி சிவஞானம், மாத்தளை மாநகர சபை முன்னாள் நகராதிபதி சந்தனம் பிரகாஷ், முன்னாள் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,  மாவட்ட தலைவர்கள், மாவட்டத் தலைவிமார்கள், தோட்டத் தலைவர், தலைவிமார்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் 

Related posts

நாளை 24 மணி நேர நீர்வெட்டு

ஜனாதிபதி மற்றும் உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு

editor

கொழும்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி